பண்பும் பரிவும்!
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஹாஜி மீயான் அப்துல் காதர் பள்ளியில், 1979ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். புதிதாக நோட்டு புத்தகங்கள் வாங்க முடியாத நிலையில் இருந்தேன். கரும்பலகையில் ஆசிரியர் எழுதும் பாடங்களை நகல் செய்ய வழி இன்றி தவித்தேன்.வகுப்பு ஆசிரியை பீயூலா இதை அறிந்தார். தன் மகள்களின் புதிய நோட்டுகளை தந்தார். எழுதி பயிற்சி பெற உதவினார். சிரமப்பட்ட மாணவ, மாணவியருக்கு மிகுந்த அக்கறையுடன் உதவிகள் செய்வார். பரிவுடன் நடந்து கொள்வார். பாடம் நடத்துவதுடன் கடமை முடிந்தது என எண்ணாமல், மாணவர்கள் நிலையறிந்து, முழு மனதுடன் உதவியதை மறக்க இயலாது.இப்போது, என் வயது 50; அரசு துறையில் உயர் பதவியில் இருக்கிறேன்; அந்த ஆசிரியை காட்டிய பரிவை நினைவில் கொண்டுள்ளேன்.- க.ராஜகோபால், திருநெல்வேலி.தொடர்புக்கு: 94432 27939.