உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

ஜப்பானின் புகழ்பெற்ற பத்திரிகையில் ஒரு தலைமை நிருபர் இருந்தார். அவர் மூன்று மாதம் லீவு எடுத்துக் கொண்டு தூரப் பிரதேசத்தில் இருந்த ஒரு சிறு தீவு நாட்டில் சென்று, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தத் தீவில் பயங்கர பூகம்பம். தீவில் ஏகப்பட்ட கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகிவிட்ட தாகவும், ஏராளமான மக்கள் பலியாகி விட்டதாகவும் தகவல்.நல்லவேளை! எதிர்பாராத விதமாக நம் தலைமை நிருபர் அந்தத் தீவிற்குத்தான் சென்றுள்ளார். அவரிடமிருந்து உடனடித் தகவல் வரும்... நம் பத்திரிகைதான் அந்த பூகம்பச் செய்திகளை முதன்முதலில் விரிவாக வெளியிடப் போகிறது! என்று எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தனர். நிருபரிடமிருந்து செய்தி வந்தது. ''பயப்பட வேண்டாம். நான் பத்திரமாக இருக்கிறேன்!'' என்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !