தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில், நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள், பாம்பு பிடிப்பதில் புகழ் பெற்றவர்கள். எந்த வகை விஷப்பாம்பையும், வெறுங்கைகளால் லாவகமாகப் பிடித்து விடுவர். இதற்கான பயிற்சியை பாரம்பரியமாக, முன்னோரிடமிருந்து பெறுகின்றனர். இருளர் இனப் பெண்களுக்கும், இந்த திறமை உண்டு. இதை வெளியுலகிற்கு காட்டியவர், சுற்றுச்சூழல் அறிஞர் ரோமுலஸ் விட்டேகர்; அமெரிக்காவை சேர்ந்தவர். இந்தியாவில், கருநாக பாம்பின் வாழ்க்கையை, ஆவணப்படமாக பதிவு செய்துள்ளார். மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் விதமாக, பாம்பு விஷம் சேகரிக்கும், கூட்டுறவு சங்கம் ஒன்றை நிறுவியுள்ளார். இது, சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இதில், இருளர் இன மக்களே உறுப்பினராக உள்ளனர். இந்த பழங்குடி மக்கள், எலி பிடிப்பதிலும் வல்லவர்கள்; இவர்கள் திறமையை அரசும் பயன்படுத்துகிறது.