நெல்லிக்காய் சாதம்!
தேவையான பொருட்கள்:சூடான சாதம் - 3 கப்பெரிய நெல்லிக்காய் - 2பெரிய வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 2மஞ்சள் துாள் - 1 தேக்கரண்டிநல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதனுடன், துருவிய நெல்லிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் துாள் போட்டு, நன்கு வதக்கவும்.இந்த கலவையுடன், சூடான சாதம் போட்டு கிளறவும். சுவையான, 'நெல்லிக்காய் சாதம்!' தயார். கால்ஷியம் சத்து மிகுந்தது. எலுமிச்சை சாதம் போல், வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.- தீ.மோனி, திருப்பூர்.