கேழ்வரகு குலோப் ஜாமூன்!
தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை - 750 கிராம்கேழ்வரகு மாவு - 1 கப்எண்ணெய் - 500 மி.லி.,நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:அடி கனமான பாத்திரத்தில், பாலை கொதிக்க விட்டு, சிறு தீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.பால், மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் ஆற வைத்து, கேழ்வரகு மாவு, நெய் சேர்த்து பிசையவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி, பாகு பதத்திற்கு காய்ச்சவும்.கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை உருண்டைகளாக்கி பொரித்து, சர்க்கரைப் பாகுவில் ஊற வைக்கவும். சுவையும், மணமும் மிக்க, 'கேழ்வரகு குலோப் ஜாமூன்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்!- கே.முருகேஸ்வரி, சிவகங்கை.