உள்ளூர் செய்திகள்

ஹாரிபாட்டர் கண்ணாடி!

பிரபலமான ஹாரிபாட்டர் நாவல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் சினிமா, 2001ல் வெளியானது; கடைசி படம், 2011ல் வெளியிடப்பட்டது.இந்த கதைகள் சார்ந்து, எட்டு சினிமாக்கள் வெளியாகி உள்ளன. ஹாரிபாட்டர் வேடத்தில், டானியல் ராட்கிலிப் நடித்துள்ளார். படப்பிடிப்புகளின் போது, 160 மூக்கு கண்ணாடிகளை இவர் பயன்படுத்தி உள்ளார். இது தவிர, 70 மந்திரகோல்களும் படத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்தவர் பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். இவை, ஹாரிபாட்டர் என்ற கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டவை. உலகம் முழுதும் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன.- அபிஷேக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !