உள்ளூர் செய்திகள்

உயிர்காத்த உள்ளம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாண்போர்ட் மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...ஒரு நாள், நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்தேன்; வகுப்பு ஆசிரியர் ராம்குமார், 'சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, விவசாயம் பற்றி அறியலாம்...' என்றார். அதன்படி, விவசாயிகளை சந்தித்தோம். வேளாண் நுட்பங்களை தெளிவாக எடுத்து கூறினர். திரும்பியபோது, இருசக்கர வாகனம் ஒன்று, என் மீது மோதியது; தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதித்த மருத்துவர், 'ரத்தம் அதிகமாக வீணாகி விட்டது. உடனே உடலில் ஏற்ற தேவைப்படுகிறது...' என்றார். ரத்தம் வழங்கி என் உயிரை காப்பாற்றினார் வகுப்பு ஆசிரியர். நினைவு திரும்பும் வரை என் அருகில் இருந்தார். கண் விழித்ததும் நன்றி கூறினேன்.அதற்கு, 'வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரையும் என் பிள்ளைகளாக கருதுகிறேன். நீ நலம் பெறுவது தான் முக்கியம்...' என்றார். நெகிழ்ந்து கண்ணீர் வடித்தேன்.என் வயது, 34; அரசு பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறேன்; உயிரை காத்து கற்பித்த ஆசிரியரை தெய்வமாக வணங்குகிறேன்.- க.சஞ்சய், விழுப்புரம்.தொடர்புக்கு: 96590 33777


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !