உள்ளூர் செய்திகள்

மாருதியின் தாவல்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில், 2001ல், தமிழ் வழியில், 9ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியர் வீரமணி, கதை சொல்லி நகைச்சுவையாக பாடம் நடத்துவார்.வகுப்பில், துாய தமிழில் மட்டுமே உரையாடுவார்; மாணவர்களும் அவ்வாறே கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதித்திருந்தார்.ஒருமுறை வகுப்பில் இருவர் தொடர்ந்து பேசியபடியே இருந்தனர். அதை அறிந்து, 'அங்கே என்ன சத்தம்... பேசியவர்கள் எழுந்து நில்லுங்கள்...' என்று கூறி, பேசியதற்கான காரணம் கேட்டார்.மாணவன் மாருதி, 'ஐயா... என் தாவலை பிடுங்கிக் கொண்டான் மணி...' என்றான். ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை; பக்கத்தில் இருந்தவனிடம் விசாரித்தார். அவன், பேனாவை பிடுங்கியதால் ஏற்பட்ட சண்டை பற்றி விளக்கினான்.பேனாவை தமிழில், 'துாவல்' என்பர். அந்த சொல்லை, 'தாவல்' என தவறாக உச்சரித்திருந்தான்.சண்டையைத் தீர்த்து வைத்து, 'மாருதி... உன் தாவலை யாராலும் பிடுங்க முடியாது...' என்று கூறினார் ஆசிரியர். அவர் சொன்னதன் பொருள் புரியாமல் முழிக்க, 'மாருதி என்றால் குரங்கு; குரங்கின் தாவலை யாராலும் பிடுங்க முடியாது...' என்று விளக்கினார்.வகுப்பறையே கலகலத்தது!இப்போது, என் வயது, 33; தமிழின் சொற்சிறப்பை நகைச்சுவையாக புகட்டிய அந்த ஆசிரியரை எண்ணி மனம் நெகிழ்கிறது.- வினோதினி, கோவை.தொடர்புக்கு: 95973 37791


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !