உள்ளூர் செய்திகள்

பிச்சைக்காரர் கொடுத்த நிதி!

ஒருசமயம் அன்னை தெரசா மாடியில் சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கீழ் தளத்திலிருந்து மா...மா.... மா என்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஒரு சகோதரி வந்து, 'ஒரு பிச்சைக்காரன் உங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்' என்று சொல்கிறான் என்றார்.'அன்னை தெரசாவிடம் மட்டுமே பேசவேண்டும்' என்று பிச்சைக்காரனிடமிருந்து செய்தி வர, அன்னை அவனிடம் சென்றார்.அவர் பிச்சை கேட்க அங்கு வரவில்லை. தன் தட்டில் இருந்த சில்லரைக்காசுகளே அவனுடைய அன்றைய வருமானம். அதை அப்படியே அன்னைக்கு அளிக்கவேண்டும் என்றுதான் அவர் வந்திருந்தார்.என்ன செய்வதென்று தெரியாமல் அன்னை ஒரு நொடி திகைத்து நின்றார். அதைத் தான் எடுத்துக் கொண்டால் அன்று இரவு உணவுக்கு அவனுக்கு வழியில்லாமல் போகும். அவர் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ளாவிட்டால் அவனுடைய இதயத்தைக் காயப்படுத்தி விட்டதுபோல் ஆகும். என்ன செய்வது என்று ஒருகணம் யோசித்த அன்னை, தட்டிலிருந்த சில்லரைக் காசுகளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தார். தனக்குள்ளதெல்லாம் கொடுத்த மகிழ்ச்சியில் இருந்த அந்தப் பிச்சைக்காரர் அன்னையின் திருக்கரங்களை முத்தமிட்டு கண்களில் ஒற்றி அன்னையை தரிசித்த மகிழ்ச்சியோடு அழுதபடியே போய்விட்டான்.அவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தார். அநேகமாக இன்றிரவு அவர் உண்ணுவதற்கு ஏதுமில்லை. நோபல் பரிசு மற்றும் எனக்களிக்கப்பட்ட இதர பரிசுகளை விட இவர் (பிச்சைக்காரர்) கொடுத்ததை அதிக உயர்வாக மதித்துப் போற்றுகிறேன்' என்றார் அன்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !