அட்டையில்...
எஸ்.சவுந்தர்யா லட்சுமி. பெற்றோர்: செந்தில் குமார், ஜெயந்தி; காது கேளாமை மனவளர்ச்சி மற்றும் கண்பார்வையில் குறையுள்ள சவுந்தர்யா, சென்னையில் உள்ள கிளார்க் காதுகேளாதோர் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது, கண் குறைபாடு சிறப்புப் பள்ளியை சேர்ந்த மாணவி.ஒன்றும் செய்யாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்த குழந்தை இன்று படிப்பு, நடனம், சிறு கை தொழில்கள், கை வேலைகள் என சகலகலா வல்லியாகத் திகழ்கிறாள்.இப்பள்ளியின் பிரின்சிபல், திப்தி கர்நாட். சவுந்தர்யாவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் ஆசிரியை, ஜெயந்தி. இந்த பள்ளியில் உள்ள பிள்ளைகள் விரும்பி வாசிக்கும் இதழ் சிறுவர்மலர்.ஹாட்ஸ் ஆப் சவுந்தர்யா.