உள்ளூர் செய்திகள்

மறக்க முடியவில்லை

திருநெல்வேலி மாவட்டம், முனைஞ்சிப்பட்டி, குருசங்கர் அரசு பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக இருந்தார் சங்கர் ராமன். தமிழ் மொழியிலும், கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அன்று பள்ளியில், காலை இறைவணக்கம் பாடுவதற்கு யாரும் முன் வரவில்லை. நான் இசையில் பயிற்சி பெற்றிருந்ததை அறிந்த தமிழாசிரியர் அழைத்தார். தயங்கி நின்ற எனக்கு நம்பிக்கையூட்டினார். உற்சாகப்படுத்தும் வகையில், 'ஒரு கோடி பாடலுக்கும் இசை ஒன்று தான்...' என துவங்கும் பாடலை எழுதி, மெட்டமைத்து பாடும் பயிற்சியை தந்தார்.பதற்றத்தால், 'எனக்கு இதெல்லாம் வராது...' என மறுத்தும் விடாப்பிடியாக, 'படித்தால் பயம் போகும்...' என்று ஊக்கப்படுத்தி பாட வைத்தார். முதல் நாளே மிகுந்த கைத்தட்டலுடன் பெரும் வரவேற்பை பெற்றேன். இறையை வணங்கி ஒவ்வொரு நாளும் மிகுந்த உற்சாகத்துடன் பாடி வந்தேன்.இப்போது, என் வயது, 70; ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இன்றும் எந்த நிகழ்விலும் மேடையில் பாடத் தயங்குவதில்லை. அப்படி பாடும் போதெல்லாம் அந்த தமிழாசிரியரை மனதில் வணங்கி கொள்கிறேன். பள்ளியில் முதல் முறையாக பாடிய நிகழ்வை மறக்க முடியவில்லை.- ரா.ருக்மினி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !