உள்ளூர் செய்திகள்

மாதுளம் பூ துவையல்!

தேவையான பொருட்கள்:மாதுளம் பூ - 2 கப்தேங்காய் துருவல் - 1 கப்கறுப்பு உளுந்து - 2 தேக்கரண்டிமிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் - தேவையான அளவுநல்லெண்ணெய், உப்பு, தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், துண்டாக்கிய பச்சை மிளகாய், மாதுளம் பூவை சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சத்துக்கள் நிறைந்த, 'மாதுளம் பூ துவையல்' தயார்! இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- எஸ்.ராஜம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !