உள்ளூர் செய்திகள்

வாழைப்பூ ஓட்ஸ் லட்டு!

தேவையான பொருட்கள்: வாழைப்பூ --- 1 கப் ஓட்ஸ் -- 1 கப் தேங்காய் துருவல்-- 4 கப் ஏலக்காய் பொடி, தேன், நெய், முந்திரி -- தேவையான அளவுசெய்முறை: வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில், மீண்டும் சிறிது நெய் சேர்த்து, நீர் எதுவும் இல்லாமல் வாழைப்பூ மசியும் வரை வதக்கவும். அதில் தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். பிறகு, வறுத்த ஓட்ஸை சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு தேன் ஊற்றி நன்கு கலந்து, கையால் உருட்டி லட்டு போல உருண்டை பிடிக்கவும். பறிமாறும் போது, லட்டு உருண்டை மீது, வறுத்த முந்திரி வைக்கவும். 'வாழைப்பூ ஓட்ஸ் லட்டு!' தயார். சத்துடன், அபார ருசியும் இருக்கும். - ரம்யா, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !