உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 62; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 30 ஆண்டு காலமாக வாசித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழை சிறு குழந்தை போல படித்து மகிழ்கிறேன்; அதற்கு, தீவிர ரசிகையாகவும் இருக்கிறேன்.சிறுவர்மலர் இதழில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி, 'இளஸ்... மனஸ்...' பகுதி, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி, 'உங்கள் பக்கம்!' பகுதி, சிறுகதைகள் எல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானது. சலிப்பின்றி விடாமல் படித்து வருகிறேன். அதில் வரும் செய்திகளை என் பேரனுக்கு அலைபேசியில் சொல்லி விடுவேன்; அவனையும் படிக்க ஊக்குவிக்கிறேன். வயது பாகுபாடின்றி எல்லாரும் கற்க வேண்டிய பொக்கிஷம் சிறுவர்மலர். அதன் வளர்ச்சி நாளும் பெருக மனமார்ந்த வாழ்த்துகள்!- ஓ.ஆர்.திலோத்தமா, மதுரை.தொடர்புக்கு: 97902 26429


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !