உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 52; முதுகலை ஆசிரியையாக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டு காலமாக வாசித்து வருகிறேன். ஆக்கபூர்வமான தகவல்களை அள்ளித்தந்து அறிவை வளர்க்கிறது.பொது அறிவு செய்திகளை சுவாரசியமாக தரும், 'அதிமேதாவி அங்குராசு!' எனக்கு மிகவும் பிடித்த பகுதி. பள்ளிப் பருவ நினைவுகளை சுமந்து வரும், ஸ்கூல் கேம்பஸ், எளிய வாசிப்பிற்கு உகந்த படக்கதை மற்றும் தொடர்கதை, சுவை மிக்க உணவு செய்முறை வழங்கும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' என எல்லாம் சிறப்பாக உள்ளன.சிறுவர், சிறுமியரை சிந்திக்க துாண்டும் சிறுகதைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள், குழந்தைகள் கைவண்ணத்தில் மிளிரும், 'உங்கள் பக்கம்!' பகுதி, நல்ல ஆலோசனை தரும், 'இளஸ்... மனஸ்...' மற்றும் குழந்தைகள் புகைப்படங்கள், பரிசு போட்டி என, சுவாரசியங்களை தாங்கி வரும், சிறுவர்மலர் இதழுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!- எஸ்.கவுரி மீனாட்சி, மதுரை.தொடர்புக்கு: 94880 12454


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !