வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 78; சென்னை மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சனிக்கிழமை காலை, சிறுவர்மலர் இதழுக்காக காத்திருப்பேன். கிடைத்தவுடன், முதலில் பார்ப்பது பின் அட்டையில் அருமையாக போஸ் கொடுக்கும் குட்டிக்குழந்தைகளின் தெய்வீக முகங்களைத் தான். அடுத்தது, சிறுவர், சிறுமியர் வரைந்து அனுப்பும் கற்பனைத்திறன் மிக்க ஓவியங்களை ரசிப்பேன். இதில் வரும், 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள் சிரிப்பால் குலுங்க வைக்கும். அதிமேதாவி அங்குராசு சொல்லும் அறிவியல் தகவல்கள், குழந்கைளுக்கு மட்டுமல்ல, என் போன்றோருக்கும் பயன் தருகிறது. கற்பனை வளம் மிக்க படக்கதை, தொடர்கதை எல்லாம் அற்புதமான இலக்கிய விருந்து. சிறுவர்மலர் இதழை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது உண்மை; அதற்கு என்னையே உதாரணமாக கூறலாம்!- சுப்ர.அனந்தராமன், சென்னை.தொடர்புக்கு: 80991 07855