கம்பு வடை!
தேவையான பொருட்கள்:கம்பு மாவு - 500 கிராம்கோதுமை மாவு - 2 மேஜை கரண்டிஎள் - 2 தேக்கரண்டிதயிர் - 0.5 கப்உப்பு, எண்ணெய், இஞ்சி, பச்சை மிளகாய், தண்ணீர் - தேவையான அளவுமஞ்சள் துாள், மிளகாய்துாள், பெருங்காயத்துாள் - சிறிதளவு.செய்முறை:கம்பு, கோதுமை மாவுகளுடன் எண்ணெய், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், அரைத்த எள், தயிர், மஞ்சள் துாள், மிளகாய் துாள், பெருங்காயத்துாள், உப்பு சேர்க்கவும். இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசைந்து, இரண்டு மணி நேரம் ஊற விடவும். பின், மாவை, சிறிய உருண்டைகளாக்கி வடையாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'கம்பு வடை' தயார். ஆரோக்கியம் தரும். அனைத்து வயதினரும் விரும்புவர்.- ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.