உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு!

ஈரோடு மாவட்டம், பவானி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்த போது, தவறாமல் நுாலகத்துக்கு செல்வேன். பொது அறிவு புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வந்து படிப்பேன். முறையாக பராமரிக்கா விட்டால் திருப்பி கொடுக்கும் போது அட்டை கிழிந்து இருக்கும். அதை அலட்சியம் செய்து விடுவேன். உடன் படித்தவர்களும் இதுபோலவே கடைபிடித்து வந்தனர்.வகுப்பு ஆசிரியர் ஜீவமணி ஒருநாள், 'படிக்கும் போது புத்தகம் கிழிந்தால், ஒட்டியோ, தைத்தோ எடுத்து வர மாட்டீர்களா...' என உணர்த்தி கடிந்தார்.அது மனதில் பதிந்தது. எந்த பொருளையும், கவனமாக பாதுகாக்கும் உறுதியை எடுத்துக் கொண்டேன்.என் வயது, 72; தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். இப்போதும், நுாலகத்தில் புத்தகம் எடுத்து படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். எடுத்து வரும் புத்தகம் கிழிந்து இருந்தால், ஒட்டியோ, ஊசி நுாலால் தைத்து கொடுப்பதை கடமையாக செய்து வருகிறேன். இந்த பொறுப்பை மனதில் விதைத்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.- கே.எஸ்.உமாசங்கர், கோவை.தொடர்புக்கு: 99523 37828


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !