மூன்று நாள் தவிப்பு!
மதுரை, திருமங்கலம், பி.கே.என்.ஆரம்ப பள்ளியில், 1965ல், 5ம் வகுப்பு முடித்து முழு ஆண்டுத்தேர்வு முடிவுக்காக காத்திருந்தேன். முடிவை விரைந்து அறியும் ஆவலில், 'அ' பிரிவு ஆசிரியரை நாடியுள்ளார் என் அண்ணன். அவர் தேர்வு அறிக்கையைப் பார்த்து, 'பெயிலாகி விட்டான்...' என்று கூறியுள்ளார். அதை நம்பி, துயரத்தில் ஆழ்ந்தோம்.மூன்று நாட்களுக்குப் பின், முறையான தேர்ச்சி விபரம், அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதில், நான் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டிருந்தது. என் குடும்பத்தார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நடந்தது இதுதான்...என் பெயரில் மற்றொருவன், 'அ' பிரிவில் படித்து வந்தான். நான், 'ஈ' பிரிவில் படித்தேன். அந்த விவரம், அண்ணனுக்கு, தெரியாததால் குழப்பம் ஏற்பட்டிருந்தது. முறையாக அணுகாததால், மூன்று நாட்கள் தவிக்க வேண்டியதாயிற்று.தற்போது என் வயது, 65; கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எதையும் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும் என்ற பாடத்தை அந்த நிகழ்விலிருந்து கற்றேன்.- கா.யாக்கூப், மதுரை.தொடர்புக்கு: 97900 44905