வெட்டுக்கிளி வறுவல் வேண்டுமா?
யுகாண்டா நாட்டின் தலைநகர், 'கம்ப்பாலாவில்' டிசம்பர் மாதம் வந்தாலே பிள்ளைகளுக்குக் ஒரே கொண்டாட்டம்தான். மழை விட்ட பிறகு, ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள், தெரு விளக்கைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். உடனே சிறுவர்களும், பெரியவர்களும் ஆளுக்கு ஒரு வலைக் கூடையை விளக்கடியில் வீசி வெட்டுக்கிளிகளைப் பிடித்து விடுவர்.அப்புறம் என்ன? இறக்கைகளையும், கால்களையும் பிய்த்து விட்டு, கடாயில் போட்டு அனலில் வறுத்து விடுவர். மாலை நேரத்தின் தின்பண்டம் இந்த வெட்டுக் கிளிகள்தான். இது 'மொறு மொறு' வென்று தின்னத் தின்னத் தெவிட்டாத சுவை. புரதச்சத்து நிறைந்தது; கருநீர்ச் சத்து (கார்போ ஹைட்ரேட்) நிறைந்தது என்று இந்த நொறுக்குத் தீனிக்கு சான்றிதழ் வேறு வழங்குகின்றனர்.