வீ டூ லவ் சிறுவர் மலர்!
என் பெயர் சங்கரி வெங்கட். இப்போது வசிப்பது சென்னை புதுப்பெருங்களத்தூரில். 15 வருடங்களாக தினமலர் வாசகர்கள் நாங்கள். என் வயது, 75. சமீபத்தில், என் தாயார் காலமானார். அப்போது அவருடைய வயது, 100. தினமும் தினமலர் படிப்பார். அதிலும், சிறுவர்மலர் இதழை மிகவும் விரும்பிப் படிப்பார். சின்னக் குழந்தை போல குதூகலத்துடன் ஒவ்வொரு கதைகளையும், அதிலுள்ள நீதிகளையும் ரசித்துப் படிப்பார். இப்போது மட்டும் என் தாயார் உயிருடன் இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்.எனக்கு, 'நல்ல பசங்க!' என்ற பெயரில் வெளியிடும் மாணவர்களது ஒழுக்கம் பற்றிய பகுதி ரொம்ப பிடிச்சிருக்கு. குட்டிக் கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நீங்கள் கூறும் உயர்ந்த கருத்துக்கள் ரொம்ப சூப்பர்.முக்கியமாக நம்முடைய இந்தியாவிலேயே இருக்கும் பல இடங்களின் சிறப்புகளை அழகாக வெளியிட்டிருந்தீர்கள். பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, இங்குள்ள ராக் கார்டன், தொட்ட அலடாமாரா ஆலமரம், ஜனாதிபதி மாளிகை, இவற்றைப் பற்றி நீங்கள் வெளியிட்டிருந்த சிறப்புக் கட்டுரைகளைப் படித்ததும், 'இவற்றை எல்லாம் நாம் பார்க்கவில்லையே...' என என் மனம் ஏங்குகிறது. அமெரிக்காவில் இருக்கும் என் மகன் வரும்போது, இந்த இடங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு போய் காட்ட சொல்லியிருக்கேன்.வளரும் இன்றைய குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டி நம் சிறுவர்மலர் இதழ்தான்.ஸோ, எங்கள் சாய்சும் சிறுவர்மலர்தான்!