உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 60. என் இளமைக்காலத்தில் எந்த நாளிதழும் இலவச இணைப்பாக, சிறுவர்களுக்கு புத்தகம் வழங்க முன்வரவில்லை. இந்த நிலையில், 'சிறுவர்மலர் இதழ், நவ., 22, 1985 முதல், வெள்ளிக்கிழமை தோறும் வெளிவர உள்ளது' என, தினமலர் நாளிதழில் அறிவிப்பு வந்தது. இதைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.அன்று முதல் சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன். சிறுவர் இலக்கிய உலகிற்கு, மாபெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. சனிக்கிழமை வந்தால், எங்கள் குடும்பமே சிறுவர்மலர் இதழில் மூழ்கி விடுகிறது.சர்க்கரை வியாதியோடு வாழும் எனக்கு, தோழியாய், பயனுள்ள, பண்புமிக்க அறிவுரைகளை வழங்கி வருகிறது சிறுவர்மலர் இதழ்!- சு.ராஜலட்சுமி, சிவகங்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !