வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 71; சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். கவனமெல்லாம், தொழில் முன்னேற்றத்திலேயே இருந்ததால், பெரிதாக பத்திரிகை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை. அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டுமே படிப்பேன்.எனக்கு பேத்தி பிறந்ததும், வாழ்க்கை கண்ணோட்டம் மாறியது. அவளுக்கு கதை சொல்வதற்காக, தேடி தேடி புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான், பல்சுவை களஞ்சியமான சிறுவர்மலர் இதழையும் படிக்க ஆரம்பித்தேன்.என் பேத்தி மழலை மொழியில், 'சில்வர் மலர்' என குறிப்பிட்டு வாங்கி, பக்கங்களை பிஞ்சு கைகளால் புரட்டுவாள்; இதழில் வரும் சிறப்பான தகவல்களை புரியும்படி எடுத்துரைத்து வருகிறேன்.இப்போதெல்லாம் பேத்தியைப் போலவே, சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழுக்காக காத்திருக்க துவங்கியுள்ளேன்!- ஜி.சுவேதாரண்யம், சென்னை.