வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 72; சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள வனவாணி மேல்நிலைப்பள்ளி உட்பட, சில பள்ளிகளில் தலைவராக பணி ஆற்றியுள்ளேன்; சிறுவர்மலர் இதழின் அதி தீவிர ரசிகன். வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும், அதற்கு காரணம் பள்ளியில் படித்த நாட்கள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அந்த பொன்னான நாட்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் வரும் கடிதங்கள்; அந்த கடிதத் தலைப்புகள், மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன; அவை அறத்தை போதிக்கின்றன; நன்றியறிதலை வெளிப்படுத்துகின்றன.சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம், பசு மரத்து ஆணி போல் மனதில் பதிந்திருப்பதை, சிறுவர்மலர் உறுதி செய்கிறது. சிறுகதைகளும் மிகவும் அற்புதமாக உள்ளன. அவற்றை, என் பேரன் அனிருத்துக்கு கூறாமல் நான் தப்பவே முடியாது. படிக்க துாண்டுகிறது, 'இளஸ்... மனஸ்...' பகுதி. இதை, மிகுந்த பெருமையுடன் பதிவிடுகிறேன். சிறுவர்மலர் இதழுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!- ம.ச.பிந்து மாதவன், பெங்களூரு.தொடர்புக்கு: 93810 19713