உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 47; இல்லத்தரசியாக இருக்கிறேன்; சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். முன் காலத்தில், கூட்டு குடும்பங்களில், குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்விக்க முதியவர்கள் இருந்தனர். இதனால் நல்ல பழக்கங்கள் வளர்ந்தன. அந்த வழக்கம் தற்போது குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, நீதியுடன் சிறுகதைகள் புகட்ட, ஏணியாக உதவுகிறது, சிறுவர்மலர். இதில் இடம் பெறும், புதிர் போட்டி, ஸ்கூல் கேம்பஸ், மொக்க ஜோக்ஸ், உங்கள் பக்கம் பகுதிகள் எல்லாம், குழந்தைகள் அறிவு திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் உள்ளன. அறிய தகவல்கள், ஆச்சரியம் தருவதோடு, வாழ்க்கைக்கு பயன்படுகின்றன. படிக்க சலிப்பு ஏற்படுத்தாமல் எல்லா வயதினரையும் கவர்ந்துள்ளது. இதுகண்டு, மனம் பூரிப்படைகிறேன். இந்த புனித பணியை, சலிப்பின்றி செய்து வரும் சிறுவர்மலர் இதழுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!- எம்.வைஜெயந்திமாலா, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !