வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 71; எம்.ஏ., பட்டதாரி. அரசியல் கட்சி ஒன்றில் கொள்கை விளக்க பேச்சாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டு காலமாக படித்து வருகிறேன். பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, சிறுவர்மலர் இதழ் கருத்துகள் கை கொடுக்கின்றன. ஒவ்வொரு பகுதியும், அறிவைக் கூர்மையாக்குகின்றன; அறியாமையை அகற்றும் விதமாக உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு தமிழ் கற்றுத் தருகிறது; பெரியோருக்கு பகுத்தறிவைப் புகட்டும் பகலவனாய் திகழ்கிறது.சிறுவர்மலர் இதழில் படைப்புகளுக்கு சன்மானம் அளிப்பதை சான்றோரும் பாராட்டுகின்றனர். என் பள்ளி அனுபவத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் படித்த என் பேரன், பேத்தியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டிலா மகிழ்ச்சியடைந்தனர்.சிறுவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் ஏற்ற அற்புத விளக்கு சிறுவர்மலர்; ஒவ்வொரு சனிக்கிழமையும், பசுவின் வரவை எதிர்பார்க்கும் கன்று போல காத்திருக்கிறோம். வையகம் போற்றும் சிறுவர்மலர் வாழ்க வளர்க!- ஆ.சந்தானம், திருப்பூர்.தொடர்புக்கு: 95975 54685