வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 62; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை நீண்ட காலம், ஆர்வமாக படித்து வருகிறேன்.நந்தவனத்தில், பல வண்ண மலர்கள் மலர்ந்து மணம் வீசி அழகை வெளிப்படுத்தும். அதுபோல, சிறுவர்மலர் இதழின் அனைத்து பகுதிகளும், எழிலாக மலர்ந்து மனம் கவர்கின்றன. குறிப்பாக, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி அனுபவ பாடத்தை சுவையாக ஊட்டுகிறது. இனிமையான பள்ளி நாட்களை நினைவுபடுத்துகிறது. ஆசிரிய பணியின் மதிப்பை, மேன்மையை உயர்த்தி பேசுகிறது. அனைத்து வயதினரும் விரும்பி படிக்கும் சிறுவர்மலர் இதழுக்கு, இதயம் கனிந்த பாராட்டுகள்!- ஆ.சங்கர சுப்ரமணியன், துாத்துக்குடி.