உள்ளூர் செய்திகள்

யுக்கா அல்லி!

வேல் போன்ற இலைகளை உடையது, யுக்கா அல்லி செடி. தென், வட அமெரிக்க நாடுகளில் வளர்கிறது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிகம் காணப்படுகிறது. இந்த செடியில், யுக்கா என்ற பூச்சி உதவியால் மகரந்தச்சேர்க்கை நடக்கிறது. அது வினோதமாக இருக்கும்.யுக்கா மலர்களும், யுக்கா பூச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.மணி போன்ற, உருவமுள்ளது யுக்கா மலர். அதிலிருந்து மகரந்தப் பொடியை வாயில் சேகரித்து, பந்து போல் உருட்டி, அருகேயுள்ள மற்றொரு யுக்கா மலருக்கு, எடுத்துச் செல்லும் யுக்கா பெண் பூச்சி.உருட்டிய மகரந்தப் பொடியை, பூவின் சூல், தண்டுக்குள் தள்ளுகிறது. இந்த முறையால் மட்டுமே, செடியால் சூல் கொள்ள முடியும். பின், பூவின் சூல்தண்டின் அருகே முட்டைகளை இடுகிறது அந்த பூச்சி.முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும், யுக்கா விதைகளை உண்டு வாழ்கின்றன. இவை தின்றது போக, மீதம் உள்ள விதைகள் தான், புதிய தாவரங்களை உருவாக்குகின்றன. இயற்கை இந்த சுழற்சியை செய்து கொண்டே இருக்கிறது. தாவரமும், பூச்சியும் உலகில் தழைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !