உள்ளூர் செய்திகள்

பாலைவனமான ஏரி!

உலகின் பல இடங்களில் வியக்க வைக்கும் இயற்கை மாற்றங்கள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருப்போம். 60 ஆண்டுகளுக்கு முன், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த மிக பெரிய ஏரி ஒன்று, இன்று காணாமல் போய் விட்டது என்றால், ஆச்சரியமாக இருக்கிறது தானே! ஆயிரக்கணக்கான மீன் பிடி படகுகள் இந்த ஏரியில் உலா வந்தன. ஆனால், இன்று அந்த படகுகளின், சிதைந்த கூடுகள் தான், அங்கு காட்சி அளிக்கின்றன.கடந்த, 1960ல், ரஷ்யாவில், உலகின் மிக பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது, இந்த ஏரி. 68 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, இன்று பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், இயற்கை இப்படியும் மாற்றி விடுமா என்று, ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !