கவிதைச் சோலை!
உயிர்த்தெழுவேன்!எனக்கும் அவைகளுக்குமானஉறவைச் சொல்லிஎங்கிருந்தெல்லாம் வந்தனஎன் மரத்து கனியைக் கொய்ய!உண்டன, உறங்கினகூடின கும்மாளமிட்டனஆட்டம் பாட்டம்ஆர்ப்பரித்தன!நானும் சந்தோஷித்துஅத்தனை கிளைகளாலும்அரவணைத்துக் கொண்டேன்!உறவுகளின் உற்சாகம்எனக்குள் தொற்றிக் கொள்ளஆனந்த மயக்கத்தில்என் இலைகளும் பால் சொரிந்தன!விதி சிரித்தது...இடியொன்றுஎன் மேனியை சிதைக்கசிறகு முளைத்தவை மட்டுமல்லஊர்ந்து செல்பவை கூடஎன்னை விட்டுஓடி விட்டன!தனிமையும், விரக்தியும்என் விழுதுகளைமட்டுமல்லஎன் வேர்களையும்மடியச் செய்தன!என்னை கடந்து செல்லும்பறவைகளின் சிறகுகளில்ஒட்டிக் கொண்டிருக்கும்ஒரு துளி நீர் போதும்என் வேர்களை குளிர்வித்துஜீவனை உயிர்பிக்க!பட்ட மரம் இதுபயன்படாது எனபாராமுகம் காட்டிவிலகிச் செல்கின்றன!என்றாவது ஒருநாள்நானும் உயிர்த்தெழுவேன்எனக்காக அல்லபசும் மரம் தேடிபறந்து செல்லும் பறவைகள் போன்றஉறவுகளுக்காக!— ப.லட்சுமி, கோட்டூர்.