கவிதைச் சோலை!
கொடுத்தால் கிடைக்கும்!ஒன்றைக் கொடுத்தால்மற்றொன்று கிடைக்கிறது!அன்பைக் கொடுத்தால்பாசம் கிடைக்கிறது!பாசத்தைக் கொடுத்தால்பரிவு கிடைக்கிறது!நேசத்தைக் கொடுத்தால்நட்பு கிடைக்கிறது!உதவி கொடுத்தால்நன்றி கிடைக்கிறது!கண்கள் கொடுத்தால்கண்ணொளி கிடைக்கிறது!இதயம் கொடுத்தால்உயிர்த்துடிப்பு கிடைக்கிறது!உறுப்புகள் கொடுத்தால்சிலிர்ப்பு கிடைக்கிறது!உதிரம் கொடுத்தால்உயிர் கிடைக்கிறது!திறமையை கொடுத்தால்உயர்வு கிடைக்கிறது!தட்டிக் கொடுத்தால்தைரியம் கிடைக்கிறது!மகிழ்ச்சியைக் கொடுத்தால்மனநிறைவு கிடைக்கிறது!மனதைக் கொடுத்தால்மணவாழ்வு கிடைக்கிறது!விட்டுக் கொடுத்தால்வேண்டியது கிடைக்கிறது!சிசுவைக் கொடுத்தால்சந்ததி கிடைக்கிறது!எனவே, நாம்நல்லவைகளையெல்லாம் கொடுப்போம்நலம் பலவும் பெறுவோம்!— சாய், மதுரை.