இதப்படிங்க முதல்ல...
பாகுபலியை மிஞ்சும் எந்திரன் - 2!தற்போது, மெட்ராஸ் பட இயக்குனர், ரஞ்சித் இயக்கும், காளி படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்துக்காக முன்பு, காளி படத்தில் நடித்தது போன்று, இப்படத்திலும், தான் நடிக்கும், 'டான்' வேடத்திற்கேற்ப, தன் கெட்டப்பை பக்காவாக மாற்றி நடிக்கிறார். இந்த ஆண்டுக்குள், இப்படத்தை முடித்து விடும் ரஜினி, 2016ல் ஷங்கர் இயக்கும் எந்திரன்-2வில் நடிக்கிறார். அப்படத்தை, பாகுபலியை விட பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஷங்கர், ஓரிரு பிரபல பாலிவுட் நடிகர்களையாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார்.— சினிமா பொன்னையாமணிரத்தினம் படத்தில் கீர்த்தி சுரேஷ்!ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, பருத்திவீரன் கார்த்திக் நடிக்கும் படத்தை, இயக்குகிறார் மணிரத்னம். மேலும், இப்படத்தின் கதாநாயகி வேடத்தில் நடிக்க, நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசனிடம், 'கால்ஷீட்' கேட்டார். அவர்கள் இருவரும் பல படங்களில் ஒப்பந்தமாகி, 'பிசியாகி' நடித்து வருவதால், 'கால்ஷீட்' இல்லை என்று கைவிரித்து விட்டனர். அதனால், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான, மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷை அழைத்து, 'டிஸ்க ஷன்' நடத்தியுள்ளார்.தற்போது, ரஜினி முருகன், பாம்புசட்டை மற்றும் இது என்ன மாயம், பிரபுசாலமன் படம் என, ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மணிரத்னம் படவாய்ப்பு என்றதும், கேட்ட தேதியில் 'கால்ஷீட்' தருவதாக கூறியுள்ளார். அதனால், அவரை, ஓ.கே., செய்த மணிரத்னம், விரைவில் படப்பிடிப்பை துவங்க தயாராகி வருகிறார்.— சி.பொ.,கதை எழுதி நடிக்கும் அக் ஷயா!கலாபக்காதலன் படத்தில், அக்காள் கணவரான ஆர்யாவை, துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில் நடித்தவர் அக் ஷயா. அதன்பின், உளியின் ஓசை உட்பட பல படங்களில் நடித்தவர், சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி யிருந்தார். இந்நிலையில், தற்போது, யாளி என்ற கதையை தயார் செய்து, அப்படத்தில், தானே மீண்டும் நாயகியாக நடிக்கிறார். படம் இயக்குவது சிரமம் என்பதால், அவ்வேலையை நடன மாஸ்டர் காதல் கந்தாசிடம் கொடுத்துள்ள அக் ஷயா, இப்படத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பதற்கும், வாய்ப்புக் கேட்டு தன் அபிமான இயக்குனர்களை துரத்தி வருகிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போது தான் வரும்!— எலீசாஓட்டுக்காக வரிந்து கட்டிய நடிகர்கள்!இன்னும், இரு மாதத்திற்குள், நடிகர் சங்க தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், தலைவர் பதவிக்காக போட்டியிடும் சரத்குமார் மற்றும் விஷால் இருவரும் பெரிய அளவில் ஆதரவு திரட்டி வருகின்றனர். முக்கியமாக, கீழ்மட்டத்தில் உள்ள நடிகர்கள், நாடக கலைஞர்கள் என யாரேனும் உதவி கேட்டால், மேற்படி நடிகர்கள் போட்டி போட்டு, தேடிச்சென்று உதவி செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் போன்று ஓட்டுக்காக அவர்கள் இப்படி வரிந்துகட்டி நிற்பதைப் பார்த்து, ஏனைய சினிமா கலைஞர்கள், கிண்டல் செய்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பிக்கப் நடிகருடன் கூட்டணி அமைத்தால், மற்ற கதாநாயகர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளை ஓரங்கட்டி விடுவதால், தற்போது மேற்படி நடிகர், பிரியாணி விருந்து வைக்க அழைத்தாலே, எகிறி ஓடுகின்றனர் நடிகைகள். விளைவு, தன் கூடாரம் காலியாகி விட்ட விரக்தியில் இருக்கிறார், 'பிக் - அப்' நடிகர். அதனால், புது வரவு நடிகைகளுக்கு, 'பிராக்கட்' போடத் துவங்கியுள்ளார்.வெள்ளாவி நடிகைக்கு, திடீரென்று மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதனால், இதை பயன்படுத்தி, தன் கனவு கதாநாயகர்களுடன், ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று, 'ரூட்' போட்டு வருபவர். மும்பை முகாமை மாற்றி, சென்னையில் டேரா போட்டுள்ளார். எந்நேரமும் பாய் பிரண்ட் என்ற பெயரில், தன்னையே சுற்றி சுற்றி வரும் காதலனை கழற்றி விட்டுவிட்டார். அத்துடன், யாராக இருந்தாலும், அவரை, தான் மட்டுமே தனியாக, 'டீல்' செய்கிறார். அம்மணியின், இந்த, 'டீலிங்'கை கோலிவுட் ஆசாமிகள் ரொம்பவே, 'லைக்' செய்கின்றனர்.சினி துளிகள்!* விஎஸ்ஓபி படத்தில், தனக்கு இணையான வேடத்தில், சந்தானம் நடிக்க அனுமதி கொடுத்துள்ளார் ஆர்யா.* ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை அடுத்து, பாஷா என்கிற ஆண்டனி என்ற படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.* நெடுஞ்சாலை பட நாயகி, ஷிவதா, அடுத்து, ஜீரோ என்ற படத்தில் நடிக்கிறார்.* தனி ஒருவன் படத்தில், ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா, இருவரும் சண்டைக் காட்சியில் மோதியுள்ளனர்.* காஞ்சனா - 2 படத்தில், அதிரடி பேயாக நடித்த டாப்சி, இனிமேல் சாப்ட்டான நடிகை என்ற பட்டியலில் இருந்து விடுபட்டு, அதிரடி நடிகையாக உருவெடுக்க போகிறார்.அவ்ளோதான்!