அந்துமணி பதில்கள்!
* பா. ஜெயலட்சுமி, விருதுநகர்:தனிமை எண்ணத்தை போக்க வழி என்ன?காதலன் இருக்கிறானே... புத்தக வடிவில்? உங்களுக்கு பிடித்த, 'சப்ஜெக்ட்'டில் உள்ள புத்தகங்களை, நுாலகங்களில் இருந்து எடுத்தோ அல்லது வாங்கியோ, அதில் மூழ்குங்கள்... தனிமை என்ற எண்ணமே மூழ்கிப் போகும்! ரவீந்திரன், திருப்பூர்: மதுப் பிரியர்கள், 'ஒரு பெக், ஒரு ஸ்மால், ஒரு லார்ஜ்' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?லென்ஸ் மாமாவிடம் கேட்டேன்... 'ஒரு பெக்கும், ஒரு லார்ஜும்' ஒன்றுதானாம்... அதாவது, 60 எம்.எல்., ஒரு, 'ஸ்மால்' என்பது, அதில் பாதியாம்.ஏன் நீங்கள், 'டிரை' செய்யப் போகிறீர்களா?வேண்டாம், வேண்டவே வேண்டாம்!ஜி. கோகுலகிருஷ்ணன், திருவாரூர்: அந்துமணி என்றாலே நினைவுக்கு வருவது பயணக் கட்டுரைகள் தான். இப்போது, அவைகளை மறந்தது ஏனோ?புது நாடுகளுக்கு அனுப்ப, பொ.ஆ.,வுக்கு கடிதம் எழுதுங்கள்! கடந்த பல ஆண்டுகளாக, போய் வந்த நாடுகளுக்கே செல்கிறேன்; அதுவும் அலுவலக வேலையாக... புதிதாக என்ன இருக்கிறது எழுத!லெ.நா. சிவக்குமார், சென்னை: 'ஆபீஸ் பாய்' என்று சொல்லிக் கொள்கிறீர்கள்... நட்சத்திர ஓட்டல்களில் விருந்து சுவைத்ததாக, அடிக்கடி எழுதுகிறீர்களே...லெ.நா.சிவக்குமார் போன்ற வாசகர்கள் அழைக்கும்போது, மறுக்க இயலுமா? ஏ.எஸ். ராஜா, சென்னை: விட்டுக் கொடுப்பவனை, 'நட்டு கழன்றவன்' என்று நினைக்கிறதே இச்சமூகம்...விட்டுக் கொடுத்தவரிடம் கேட்டு பாருங்கள்... அவரது மன அமைதி பற்றி தெரிய வரும்! கொடுக்காதவர்கள், 'டாஸ்மாக்'கின் அடிமைகள்; மன நிம்மதி இழந்தவர்கள்!பெயர், ஊர் எழுதவில்லை: முகவரியில், 'அந்துமணி பதில்கள்' என்று மட்டும் எழுதியுள்ளேன்; உங்களுக்கு வந்து சேர்ந்து விடும்! ஆனால், நான் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?ஹி... ஹி... என்ன, நெய்வேலி, ரவிக்குமார்... உங்கள் கையெழுத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாதா, இந்த அந்துமணியால்!இது போக, ஆர். கிருத்திக்குமார் என்ற பெயரிலும் எழுதுவீர்களே!(தலையணையில் உங்கள் முகத்தை மூடிக் கொள்வதை இங்கிருந்தே காண முடிகிறது!)* ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை: கடிந்து கொண்ட பின், தட்டிக் கொடுப்பது சரியா, தவறா?சரியே! தவறு செய்தவர் திருந்த சரியான வழி; மீண்டும் அதுபோன்ற தவறுகளில் ஈடுபட, அவர் மனம் தடுக்கும்!