உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* தா. பிறைமதி, விருதுநகர்: வயதான பெற்றோரை, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, 'பிள்ளைகள் செத்துப் போய் விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்...' எனக் கூறும், மகன்களுக்கு என்ன அறிவுரை கூறலாம்?அவர்களுக்கும் வயதாகும்... பிள்ளைகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கூறுங்கள். வி.பார்த்தசாரதி, சென்னை: வரும் தேர்தலில், எந்த கட்சியோடு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்?அனேகமாக, தனித்து போட்டியிட வேண்டி இருக்கும். தி.மு.க., தலைவர் உட்பட, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, காங்கிரசின் போக்கு பிடிக்கவில்லை; கழற்றி விடவே முயல்கின்றனர்! டி.பசுபதி, ஊஞ்சவேலம்பட்டி, கோவை: லஞ்சம் கொடுப்பவர், வாங்குபவர் - இவர்களில், உங்கள் பார்வையில் யார் முதல் குற்றவாளி?இரண்டாமவர் தான்! அவர் கை நீட்டுவதால் தானே, முதலாமவர் கொடுக்க வேண்டி இருக்கிறது; அவர் காரியம் முடிய, 'கொடுக்க' வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.ர.ரேவதி, விழுப்புரம்: 'கொரோனா'வால் பல வார இதழ்கள், தினசரிகளின் இணைப்புகள் சரிவர கிடைப்பதில்லை. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?ஏஜன்டுகள், சப் - ஏஜன்டுகள், லைன் மேன்களின் ஒத்துழைப்பால் முடிகிறது. நம் நாளிதழ் மீது அவர்கள் வைத்திருக்கும், அன்பாலும், மதிப்பாலும், நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாலுமே இது முடிகிறது!* எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை: நாட்டில் நிலவும் இந்த கஷ்டத்திலும், எந்த, எம்.எல்.ஏ.,வும் நிவாரண நிதி வழங்கவில்லையே... ஏன்?அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டசபைத் தேர்தல், அவர்கள் கண் முன் நிற்கிறதோ என்னவோ! ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீச வேண்டுமே!இந்து குமரப்பன், விழுப்புரம்: தன் மனைவி ஜோதிகா கூறிய கருத்தில், தான் உறுதியாக இருப்பதாக, கணவர் சூரியா கூறியுள்ளதைப் பற்றி?தான் சார்ந்துள்ள மதத்திற்கு, இந்து மதத்தைச் சேர்ந்த, கணவர் சூரியாவை மாற்றி விட்டாரோ ஜோதிகா என்ற கருத்து, இவரது அறிக்கை மூலம் சந்தேகத்தைக் கிளப்புகிறது.ச.சபானா, துாத்துக்குடி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ளது சரியா?தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை; வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு என்ன குறைவாம்? அரசு முடிவு சரியானதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !