அந்துமணி பதில்கள்
எ. சாவித்திரி, புளியகுளம்: விஜயகாந்த், 2021ல் முதல்வராக வருவார் என, அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளாரே?இப்போதும் அவர் முதல்வர் தான்; 2021லிலும் அவர் தான் முதல்வர்... அது, அவர் வீட்டில்!கே. வெங்கட்ராமன், பாண்டி: அனுபவம் எனக்கு எப்போது வரும்... அறிவு எப்போது வரும்?எப்போது கடன் கேட்க செல்கிறீர்களோ அப்போது அனுபவம் வரும். அறிவு வருவது, கொடுத்த கடனை திரும்பக் கேட்க, கடன் கொடுத்தவன் வரும்போது!* த. ராஜபிரபு, திருப்பூர்: 'லெட்டர் பேடு' கட்சிகள் என்றால் என்ன அர்த்தம்?தேர்தலில் தனித்து நின்றால், ஒரு, 'சீட்' கூட கிடைக்காத கட்சி என்பதே, இதன் பொருள். ஜி. சத்திய நாராயணன், சென்னை: பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி என்ன செய்து கொண்டிருக்கிறார்?அடுத்து ஏதாவது கட்சியிலிருந்து அழைப்பு வருமா என்ற யோசனையில் கால் மூட்டை சொறிந்து கொண்டிருக்கிறார். பா.ஜ., தான் அவரை, 'டம்மி'யாக்கி விட்டதே!என். காளிதாஸ், சிதம்பரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, ஏழு ஆண்டுகளாக பணி கிடைக்காதவர்கள், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாரே...இது நியாயமே இல்லாத நிலைப்பாடு! 10ம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களைக் கூட, 'ஆல் பாஸ்' செய்து விட்டு, இப்படிக் கூறுவது அநியாயம்!பி.ஜி.பி. இசக்கி, சென்னை: 'இது பற்றி' என்று எழுதி விட்டு, எத்தனை புள்ளிகள் வைக்க வேண்டும்?ஒரு சொற் தொடர் முடியும்போது, முழுப் புள்ளி - ஒரு புள்ளி, 'புல் - ஸ்டாப்' என்பது பொருள்; அதுவே தொடர்கிறது என்றால், மூன்று புள்ளி வைக்க வேண்டும். இதன் பெயர், 'லீட்' - ஆங்கிலத்தில்!ஜி. குப்புசாமி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: 'டூ வீலரில்' எட்டு போட்ட அனுபவம் பற்றி...எட்டு என்ன... பத்து கூட போட்டிருக்கேன்... நமது வண்டி தான், 'அட்லஸ்' சைக்கிளாச்சே!* சா. சொக்கலிங்க ஆதித்யன், நெல்லை: குடும்ப ஆதிக்கம் எந்த கட்சியில் அதிகம்?என்ன சார்... இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டது... தி.மு.க.,வின் நடைமுறைகள் தெரியாமல் இருக்கிறீரே!