உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர். சுப்பு, திருத்தங்கல்: தே.தி.மு.க., தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதா?இரு திராவிட கட்சிகளுமே, 10 'சீட்' தான், தே.மு.தி.க.,வுக்கு என்று சொல்லி வருகின்றன. இதில் இவர், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 'மெஜாரிட்டி'யை பிடிக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?எஸ்.கே. கோமதி, நாமக்கல்: தர்மம் என்றும், தானம் என்றும் சொல்கின்றனரே... இதன் அர்த்தம் என்ன?இரண்டும் ஒன்று தான்! புண்ணியம் கிடைக்கும் என்று தர்மம் செய்தனர்; இப்போது, விளம்பரம் கிடைக்கும் என்று, தானம் செய்கின்றனர்!தி.சே. அறிவழகன், திருப்புலிவனம், காஞ்சிபுரம்: சசிகலாவின் பலம் என்ன... பலவீனம் என்ன?இரண்டுமே கை நீட்டல் தான்... நாலு ஆண்டு சிறை தண்டனை குறித்து மறந்து விட்டீர்களோ!* கே. விஜயகுமார், கோவை: ஒரு மனிதனின், உயர்வுக்கும், தாழ்வுக்கும் எது காரணம்?முதல் காரணம், மனம்; இரண்டாவது காரணம், பணம்! மனம் இருந்து பணம் இல்லாவிட்டால் தாழ்வு தான்! அறிவு இருந்தால் இரண்டையும் பெற முடியும்!ஆர். ராஜேந்திரன், மதுரை: பதவியில் இருப்பவர்களுக்கு, திருமண அழைப்பிதழ் அனுப்பினால், வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனரே... இது, அவர்களே செய்வதா?இதெல்லாம் அவர்கள், பி.ஏ.,கள் செய்வது. திருமண அழைப்பிதழே அவர்கள் கையில் சேராது. கையெழுத்து மட்டும் அவர்கள் இடுவர். அழைப்பிதழ், 'ஷ்ரெட்டிங்' இயந்திரத்திற்கு சென்று விடும்!க. வெங்கடேசன், மதுரை: வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும், 20 சதவீத ஒதுக்கீடு கேட்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...இதிலிருந்தே தெரியவில்லையா... பா.ம.க., மற்ற சமுதாய மக்களுக்கும் உள்ள கட்சி இல்லை என்பது!* பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை:ஊழல் குற்றச்சாட்டில், சிறை சென்றவர்கள் சுயசரிதை எழுத ஆரம்பித்தால்...அவர்கள், ஆளும் திராவிட கட்சியில் இருந்தால், அந்த சுயசரிதையை, பள்ளிப் பாடமாகவே ஆக்கி விடுவர்!ஆர். உமா, சென்னை:நான் எதை நம்ப வேண்டும்?நேற்று நடந்ததை நினைத்துப் பார்க்காதீர்கள்... இன்று ஒன்று இருக்கிறதே அதை நினையுங்கள். இறந்ததையும், வரப்போவதையும் நினைத்துக் கொண்டிருந்தால், இருப்பதும் போய் விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !