உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஜி. ராமன், நெல்லை: தனக்கு நேரும் துன்பத்தை எப்படி பொறுத்துக் கொள்வது?தனக்கு நேரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதும், உயர்வுக்கு அடிப்படை!அ. தே. இளங்குமரன், சென்னை: வெளிநாடு செல்கையில், அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு எது?எந்த நாடு சென்றாலும், பெரும்பாலான உணவகங்களில் அந்த உணவு கிடைக்கும்... அது, இத்தாலி நாட்டின் உணவு... பெயர் பாஸ்த்தா... இது, சைவம், அசைவம் இரண்டிலும் கிடைக்கும்... நான் சைவமாயிற்றே... அதைத்தான் விரும்பி உண்பேன்.* சி. குமார், சென்னை: 'பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து அகற்ற காங்கிரசால் மட்டுமே முடியும்...' என்று, ராகுல் பேசியுள்ளாரே... வாய்ப்புள்ளதா?இவர்கள், இனிமேல், ஒருநாளும் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரியும்தானே... ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்...* வா. தியாகராஜன், கல்பாக்கம், செங்கல்பட்டு: பள்ளி, கல்லுாரிகளில், சில ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள், தொடர்வதிற்கு, தீர்வு தான் என்ன?வேறு இடத்திற்கு மாற்றுவதோ, இடைக்கால நீக்கம் செய்வதோ தான் நம் நாடு செய்து வருகிறது... அவர்களை, அரபு நாடுகள் செய்வது போலவே இங்கும் துாக்கிலிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் வராது!பெ.ம. அபிராமி, திருப்பூர்: தினமலர் பத்திரிகை யாருடைய பக்கம்...அபிராமி பக்கம் தான்... தினமலர் என்றும் உண்மையின் உரைகல்... வாசகர்களான முதலாளிகளின் பக்கமே இருக்கும்!* ஆர். கோமதி, மதுரை: சமீப காலமாகவே, தமிழகத்தில், குட்கா, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் பழக்கம் அதிகரித்துள்ளதே?'டாஸ்மாக்'கின் விலை, பாட்டிலின் மேல் குறிப்பிட்டிருப்பதை விட அதிகமாகவே வாங்குகிறார்களே... அதனால் தான்!ச. புகழேந்தி, கரியமாணிக்கம்: ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், நடிகர் கமல் பங்கேற்பது, 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான நடைப் பயணமா?இரண்டு பேருமே வெற்றி பெற போவதில்லை... ராஜ்யசபா, எம்.பி., பதவியாவது கிடைக்கலாம் என்று, கமல் ஆசைப்படுகிறார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !