ஸ்மார்ட் போனுக்கு அடிமையா நீங்கள்?
* நீங்கள் அலைபேசியில், அதிக நேரம் செலவிடுகிறீர்களா?* செய்வதற்கு பயனுள்ள வேலைகள் பல இருந்தாலும், அதை பொருட்படுத்தாது, அலைபேசியை எப்போதும் பார்த்தபடி இருக்கிறீர்களா?* உங்கள் கையில் அலைபேசி இருக்கும்போது, நேரம் போவதையே உணராமல் இருக்கிறீர்களா?* நேரடியாக மக்களிடம் பேசுவதை காட்டிலும், குறுஞ்செய்தி, 'இ - மெயில்' அனுப்புவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?* உணவு அருந்தும்போது கூட, உங்கள் அலைபேசி அருகிலேயே உள்ளதா?* அலைபேசி, உங்களின் படுக்கையில் இருக்கிறதா?* பகல், இரவு என்றில்லாமல், வேலை, துாக்கத்திற்கிடையேயும் யார் என்ன பதிவிட்டுள்ளனர் என பார்ப்பதும், அதற்கு பதிலளிப்பதுமாக இருக்கிறீர்களா?* வாகனம் ஓட்டுதல் போன்ற முழு கவனம் தேவைப்படும் நேரத்தில் கூட, அலைபேசியை நோண்டுகிறீர்களா?* அலைபேசி இல்லாமல், உங்களால் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியவில்லையா?இதில் பலவற்றுக்கும், 'ஆம்' என்று கூறுவோமானால், 'ஸ்மார்ட் போனு'க்கு அடிமையானதாக அர்த்தம். இதிலிருந்து விடுபட, வீட்டு தோட்டம் அமைத்தல், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என, ஈடுபடலாம். மொத்தத்தில், அலைபேசியை தொலை தொடர்பு நேரத்தில் மட்டுமே கைகளில் வைத்திருப்பது சிறந்தது.- ஜோல்னாபையன்.