திருமண மண்டப வாசலில், பிரிஜ்!
பெங்களூரில், சில திருமண மண்டபங்கள், உணவகங்களின் வாசலில், 'பிரிஜ்' வைத்துள்ளனர். திருமணத்தில் விருந்தினர்களுக்கு பரிமாறியது போக மிஞ்சும் உணவு மற்றும் உணவகங்களை இரவு மூடப்படும்போது மிஞ்சும் உணவுகளை, பிரிஜ்ஜில் வைத்து விடுகின்றனர். இவற்றை, ஏழைகள் எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர்.மிஞ்சும் பண்டங்களை சேவை நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதில்லை என்பதால், இந்த ஏற்பாட்டை செய்து உள்ளனர்.இந்த, பிரிஜ் முறையை, தமிழக திருமண மண்டபங்கள், பெரிய உணவகங்களின் வாசல்களிலும் வைத்து, ஏழைகளுக்கு உணவு கிடைக்க, 'அன்பு சுவர்' எழுப்பலாமே... முன் வருவரா?— ஜோல்னாபையன்.