உள்ளூர் செய்திகள்

மூங்கில் பிரியாணி!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் மலை ஜாதியினர், மூங்கிலை பயன்படுத்தி, சமைத்து உண்பர். அவர்களிடையே மூங்கில் பிரியாணி மிகுந்த பிரபலம்.நன்கு சுத்தம் செய்த மூங்கில் உள்ளே, அரிசி, சிக்கன் அல்லது மட்டன் மற்றும் மசாலாக்களை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி மாற்றி அடுக்கி, அடுப்பில் வேக வைக்கும் முன், வாய் பகுதியை இலைகளால் மூடி வைப்பர். மூங்கிலின் வெளியில் உள்ள நிறம், கருப்பாய் மாறும்போது எடுத்து, கலவையை சுடச்சுட பரிமாறுவது தான், மூங்கில் பிரியாணி. ஒவ்வொரு முறையும், புதிய மூங்கிலை பயன்படுத்துவர்.இந்த மூங்கில் பிரியாணி, சுற்றுலா துறையின் கவனத்துக்கு வந்து, சுற்றுலா சார்ந்த உணவகங்களில் பயன்படுத்த, வேகமாக பிரபலமானது. கர்நாடகாவில், மங்களூர் மற்றும் பெங்களூரில், தற்போது, மூங்கில் பிரியாணி பிரபலமாகி வருகிறது. முதலில், அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் தெருவோர கடைகளில் அறிமுகமாகி, இன்று, பெரிய நகரங்களின் உணவகங்களை ஆக்கிரமித்துள்ளது.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !