உள்ளூர் செய்திகள்

பறவை பூங்கா!

உலகின் மிகப்பெரிய பறவை பூங்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியின் வால்ஸ் ரோடு பகுதியில், 59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1962ல் துவங்கப்பட்ட இதில், 675 வகையான பறவைகளை காணலாம். இங்குள்ள பறவைகளின் எண்ணிக்கை, 4,400.மேலும், அவற்றுக்கு தரப்படும் உணவு, அதை எப்படி சாப்பிடுகின்றன எனவும் விளக்கப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த வாத்துகள் மற்றும் ராஜாளி பருந்து, கழுகு, கிளிகள், பெரிய நீர் பறவை ஆகியவற்றின் பறக்கும் அழகை, தத்ரூபமாக இங்கு கண்டுகளிக்கலாம். இந்த பறவை பூங்காவின் மற்றொரு சிறப்பு, உலகின் வேறு எங்கும் காண முடியாத பறவைகளையும் இங்கு காண்பதே. ஆண்டுக்கு, நான்கு லட்சம் சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !