உள்ளூர் செய்திகள்

தாய்ப்பால் தெரியும்; தந்தை பால் தெரியுமா?

தாய்ப்பால் குடித்து பழக்கப்பட்ட குழந்தைகள், புட்டிப் பால் குடிப்பதற்கு, அடம் பிடிப்பது வழக்கம். அதுவும், தாய், எங்காவது வெளியில் சென்று விட்டாலோ அல்லது வேலைக்கு சென்று விட்டாலோ, தந்தையால், அந்த குழந்தையை பார்த்துக் கொள்வது, கஷ்டமான காரியமாகவே இருக்கும்.இந்த பிரச்னைக்கு, கிழக்காசிய நாடான, ஜப்பானைச் சேர்ந்த, 'டென்ட்சு' என்ற நிறுவனம், முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்காக, பிரத்யேகமாக ஒரு கருவியை, இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.'மில்க் டாங்க்' எனப்படும், இந்த கருவியில், குறிப்பிட்ட அளவு பாலை ஊற்றி வைக்க முடியும். தாயின் மார்பு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியில், 'சிலிகான் நிப்' பொருத்தப்பட்டிருக்கும்.தாய், வீட்டில் இல்லாத நேரத்தில், தந்தை, இந்த கருவியை மார்பில் அணிந்து, குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இந்த கருவியின் விலை உள்ளிட்ட மற்ற விபரங்கள், இன்னும் அறிவிக்கப்படவில்லை.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !