உள்ளூர் செய்திகள்

மாஜி மனைவியை இப்படி திட்டலாமா?

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவை சேர்ந்தவர், காலிஞ் கிஞ்சார். 'டிவி' நடிகர். இவருக்கும், பைரூஸ் என்ற சக நடிகைக்கும், 2015ல் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர்.சமீபத்தில், ஒரு நிகழ்சியில் பேசிய கிஞ்சார், தன் முன்னாள் மனைவியை பற்றி கூறினார்...'பைரூஸ் மீது, கருவாட்டு நாற்றம் அடிக்கும். அதனால் தான், அவரிடமிருந்து விவகாரத்து பெற்றேன்...' என கூறி, சத்தமாக சிரித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் சிரித்தனர்.கடும் கோபமடைந்த பைரூஸ், 'பொது நிகழ்ச்சியில், என்னை அவமதிக்கும் விதமாக பேசிய, கிஞ்சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு, என்னை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தோனேஷிய பெண்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டது...' என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.முன்னாள் மனைவியை அவமதிக்கும் வகையில் பேசிய கிஞ்சாருக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது, கோர்ட்.'தேவையில்லாமல் வாயை கொடுத்து, வாங்கி கட்டி விட்டோமே...' என, கண்ணீருடன் கம்பி எண்ணுகிறார், கிஞ்சார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !