பெண்கள் இழுக்கும் தேர்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் வெண்கலக் கொப்பரை, மைசூர் சமஸ்தான அமைச்சர் வெங்கடபதி ராயரால், கி.பி., 1745ல் வழங்கப்பட்டது. இங்கு, தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும் போது, உண்ணாமுலை அம்மன் தேரை, பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்வர்.திருவண்ணாமலை கிரிவலத்தின் போது, முதல் அடியில், உலகை வலம் வந்த பலனும், இரண்டாவது அடியில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாவது அடியில், அஸ்வமேத யாகம் செய்த பலனும், நான்காவது அடியில், அஷ்டாங்க யோகம் செய்த பலனும் கிடைக்கும்.