உள்ளூர் செய்திகள்

ஏலத்துக்கு விடப்படும் சிறுவர்கள்!

ஆப்ரிக்க நாடான, எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள மிகப்பெரிய சந்தை ஒன்றின் பெயர், ஜிங்கா. சந்தையில் வேலை செய்வதற்காக, சிறுவர்களை ஏலம் எடுப்பர், வியாபாரிகள்.இதற்காக பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஏலம் விட அழைத்து வருவர். அப்படி ஏலத்துக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள், இங்கு, காலை முதல் மாலை வரை வேலை செய்வர். இதற்காக வழங்கப்படும் பணத்தை பெற்ற பெற்றோர், அதை வைத்து ஜாலியாக இருப்பர்.பாவம் சிறுவர்கள் தான், சந்தையில் மாடாக உழைப்பர். 'இப்படி சிறுவர்கள் வேலை செய்வதால், அவர்கள் படிப்பு பாதிக்கப்படும். எனவே, சிறுவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்...' என்று சட்டம் போட்டது, அரசு. ஆனால், இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !