உள்ளூர் செய்திகள்

தீபாவளி மெனு!

பாதாம் குல்கந்து கத்லி!தேவையான பொருட்கள்:பாதாம் பருப்பு - 2 கப்சர்க்கரை - 1 .5 கப்குல்கந்து மற்றும் தண்ணீர் - தலா 1 கப்நெய் - 2 தேக்கரண்டிசெய்முறை: பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, பின், தோலுரித்து, விழுதாக அரைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, உருட்டும் பதத்தில் பாகு தயாரிக்கவும். அதில், அரைத்த விழுதை சேர்த்து, நெய் ஊற்றி, சுருள வதக்கவும். நெய் தடவிய தட்டில் பாதி விழுதை பரத்தி, மீதமுள்ளவற்றில் குல்கந்து கலந்து, அதற்கு மேல் பரத்தவும். ஆறிய பின், வில்லைகள் போடவும்.பாதாம் - கோகோ ட்ரீட்!தேவையான பொருட்கள்:பாதாம் பருப்பு - 50 கிராம்சர்க்கரை, கோகோ பவுடர் - தலா அரை கப்பால் பவுடர் - 1 கப்தண்ணீர் - .75 கப்செய்முறை: பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். பால் பவுடர், பாதாம் துருவல் மற்றும் கோகோ பவுடரை ஒன்றாக கலக்கவும். கம்பிப் பதத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் இந்த கலவையை கொட்டி, கட்டி இல்லாமல் கிளறவும். கெட்டி பதம் வந்தவுடன், நெய் தடவிய தட்டில் பரத்தி, வில்லைகள் போடவும். ஆறிய பின், தேவைப்பட்டால், ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.பாதாம் சாஹி!தேவையான பொருட்கள்:பாதாம் பருப்பு மற்றும் நெய் - தலா 100 கிராம்கடலை மாவு - 400 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலப்பொடி - சிறிதளவுசெய்முறை: சர்க்கரையை கம்பி பாகாக காய்ச்சி, நெய்யில் வறுத்த கடலை மாவு மற்றும் ஒன்றிரண்டாக பொடித்த பாதாம் பருப்பை சேர்த்து, சிறிது சிறிதாக நெய்யை விட்டு நன்கு கிளறவும். ஏலப்பொடி சேர்த்த பின், நெய் தடவிய தட்டில் பரத்தி, தேவையான அளவிற்கு துண்டு போடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !