இவங்க தான் சீனியர்!
பாண்டா கரடிகளின் ஆயுட்காலம், அதிகபட்சம், 27 ஆண்டுகள் தான். அதை தாண்டி வாழ்வது, மிகவும் அபூர்வம். ஆனால், ஹாங்காங்கில், 'ஓசன் பார்க்' என்ற பொழுது போக்கு பூங்காவில் உள்ள, ஜியா ஜியா என்ற பாண்டா, வெற்றிகரமாக, தன், 37வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.இதையொட்டி, பிரத்யேகமாக கேக் ஒன்றை தயாரித்த, பூங்கா நிர்வாகம், அதை, பாண்டாவுக்கு அருகில் வைத்து, விமரிசையாக கொண்டாடியது. உலகிலேயே, பூங்காக்களில் இருக்கும் பாண்டாக்களில், மிக அதிக வயதானது, இந்த ஜியா ஜியா தான். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த பாண்டாவின் பெயர் இடம் பிடித்துள்ளது.— ஜோல்னாபையன்.