உள்ளூர் செய்திகள்

கார்த்திகை மாதத்தில்

* கார்த்திகை மாதத்தில் தினமும் அதிகாலையில் நீராட, துன்பங்கள் அனைத்தும் தொலையும்; பூஜையில் வைத்த நெல்லிக்கனியை தானம் அளித்தால், ராஜயோகம் கிடைக்கும்.* ஏற்றிய விளக்கை தானம் அளிப்பது, வாழ்வின் இருளை விரட்டும்.* எள், தும்பைப் பூ, நெல் இவற்றோடு இம்மாத சதுர்த்தியில் தீபம் ஏற்ற, உடல் ஆரோக்கியம் உண்டாகும்.* நெல்லி மரத்தடியில் விஷ்ணுவை பூஜித்து, அன்னதானம் செய்தால், பாவங்கள் போகும்.* கார்த்திகை மாதத்தில், கோவிலை மெழுகி கோலமிடுவது, அளவு கடந்த பலனைக் கொடுக்கும்.* சிவாலயங்களில், இம்மாதம் தினமும் விளக்கு ஏற்றி வந்தால், வாழ்வில் வெளிச்சம் உண்டாகும்.* கார்த்திகை மாதத்தில் கீதை படிப்பதும், ராமாயணம் படிப்பதும், மன அமைதி கிடைக்கச் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !