இதப்படிங்க முதல்ல...
உதவி இயக்குனர்களுக்கு சலுகை அறிவிப்பு!சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, தலைவரான இயக்குனர் விக்ரமன், உதவி இயக்குனர்களுக்கு, நிறைய சலுகைகளை அறிவித்துள்ளார். முதல் அறிவிப்பாக, அவர்களின் சம்பளத்தை உயர்த்தியவர், அவர்களுக்கென்று, '5டி' கேமரா ஒன்றை, இயக்குனர் சங்கம் சார்பில் வாங்கப் போகிறார். அந்த கேமராவைக் கொண்டு, அவர்கள் இலவசமாக குறும்படங்களை இயக்கலாம். அப்படி, அவர்கள் இயக்கும் படங்களை, தயாரிப்பாளர்களுக்கு போட்டு காண்பிக்கவும், சங்கம் சார்பில் உதவிகள் செய்து தரப்படும். விக்ரமனின், இந்த அறிவிப்பினால் சந்தோஷத்தில் இருக்கின்றனர் உதவி இயக்குனர்கள்.— சினிமா பொன்னையாசஞ்சிதா திட்டம்!கொள்ளைக்காரன் மற்றும் சூது கவ்வும் படங்களில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி தற்போது, பீட்சா-2 தி வில்லா படத்தில் நடித்து வருபவர், முன் வரிசை டைரக்டர்களின் படங்களில் நடிக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக, மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் உட்பட, சில டைரக்டர்களின் பெயர்களை பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு, 'இவர்களின் படங்களில் நடிக்காமல், நான் சென்னையை காலி செய்ய மாட்டேன்...' என்று மார்தட்டி வருகிறார். ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார்!— எலீசாதீபிகாவுக்காக காத்திருக்கும் ஷாரூக் கான்!ஷாரூக் கான் நடித்து வரும், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே, சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், இப்போது, ராம்லீலா என்ற படத்திற்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்து, எஸ்கேப்பாகி விட்டார். இதனால், இதே படத்தில் தீபிகாவின் பாட்டியாக நடிக்கும், மனோரமாவுக்காக சில மாதங்களாக காத்திருந்த ஷாரூக் கான், இப்போது தீபிகாவின் வருகைக்காக, வேறு படங்களில், 'கமிட்'டாகாமல் காத்திருக்கிறார்.— சி.பொ.,'இமேஜ்' பார்க்காத ஸ்ரீ ரம்யா!யமுனா படத்தில் நடித்த ஸ்ரீரம்யா, முதல் படத்தில் விலைமாது வேடத்தில் நடித்து பரபரப்பை கூட்டியதால், அவரது நடிப்பை புகழ்ந்த, சில கோலிவுட் இயக்குனர்கள், அவரிடம் கதை சொல்லி வருகின்றனர். அதில், ஒரு கதை, கிளைமாக்சில் கணவனையே கொலை செய்யும் வேடமாம். 'எனக்கு இமேஜ் பற்றி கவலையில்லை. எந்த மாதிரி வேடம் என்றாலும், என் கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்தால், நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை...' என்று சொல்லி, 'கமிட்'டாகி விட்டார் ஸ்ரீரம்யா. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்!— எலீசாகவர்ச்சிக்கு தடை போடும் காஜல்!கார்த்தி நடித்த, பையா மற்றும் சிறுத்தை படங்களில் தமன்னாவை தோலுரித்தது போன்றே, ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில், காஜல் அகர்வாலை படுகவர்ச்சியாக்க திட்டமிட்டனர். ஆனால், 'டீசன்டான உடையில் தான், நான் அழகாக தெரிவேன். அந்த அழகு தான் என்னைப் பொறுத்தவரை கிளாமர் லிமிட்டே...' என்று சொல்லி, கூடுதல் கவர்ச்சிக்கு, தடை விதித்து விட்டார் காஜல். இதனால், அவரது முக பாவனையில் கூடுதல் ரொமான்ஸ் பீலிங்சை வெளிப்படுத்த வைத்து படமாக்கியுள்ளனர். ஆய உபாயம் அறிந்தவர் அரிது அல்ல வெல்வது! — எலீசாஓரங்கட்டும் ஸ்ருதி ஹாசன்!தமிழில், அரை டஜன் படங்களில் ஹன்சிகா நடிப்பது போன்று, தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். அதில், சில படங்களில் வேறு முன்னணி நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும், எதற்கும் அசராமல் அதிரடி கிளாமர் நாயகியாக உருவெடுத்து, மற்ற நடிகைகளை ஓரங்கட்டி வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதன் காரணமாக, அவர் நடிக்கும் படங்களில் கமிட்டாக, ஆந்திராவில் உள்ள நடிகைகள் அச்சப்படுகின்றனர். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!— எலீசாபோலிச் சாமியார்களை எதிர்க்கும் ஸ்ரேயா!தற்போது ஸ்ரேயா, சந்திரா மற்றும் பவித்ரா என, இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படங்களில், பவித்ரா படத்தில், பாலியல் தொழிலாளியாக நடித்துள்ள ஸ்ரேயா, ஒரு கட்டத்தில் போலி சாமியார்கள் மற்றும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். தனி ஒரு மனுஷியாக நின்று, போராடும் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதும், ஆயிரம் பேரை அடிக்கிறதும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதும் கெட்டிக்காரத்தனம்!— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!