இதப்படிங்க முதல்ல...
விஜயகாந்த் படத்தின் ரீ - மேக்கில் விஜய்!புலி படத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்திருக்கும் விஜய், அடுத்து, அட்லி இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே, ராஜா ராணி படத்தை, மவுனராகம் படத்தை தழுவி இயக்கிய அட்லி, இப்படத்தை, விஜயகாந்த் நடித்த, சத்ரியன் படத்தின் கதையை தழுவி, தயார் செய்திருக்கிறார். அதனால், படம் வெளியாகும் நேரத்தில், ஏதேனும் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக, முன்னதாகவே அப்படத்தின், ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளார்.— சினிமா பொன்னையா'நம்பர் ஒன்' நடிகையான சமந்தா!அஞ்சான் மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து, விக்ரமுடன், பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ள சமந்தா, தொடர்ந்து, 24 மற்றும் வேலையில்லா பட்டதாரி-௨ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் அட்லி இயக்கும் படத்தில், மீண்டும் விஜயுடன் நடிப்பவர், வெற்றிமாறன் இயக்கும், வடசென்னை படத்தில் தனுஷுடனும் இணைகிறார். இதேபோல், விக்ரமுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அஜீத் தவிர அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வரும் சமந்தா, இதுவரை நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஹன்சிகா மற்றும் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் நடிகை ஆகிவிட்டார். வாழ்கிறதும், தாழ்கிறதும் வண்டி உருளைப் போல!— எலீசாஆர்யா செய்த வைத்தியம்!'உடம்பை ஸ்லிம் ஆக்குவது எப்படி?' என்று ஆர்யாவிடம் கேட்டுள்ளார் சந்தானம். அதற்கு, 'ஒரு டீ உள்ளது; வாங்கித் தர்றேன்...' என்று சொன்னவர், மறு நாள் அதிகாலை, சந்தானத்தின் வீட்டிற்கு சைக்கிளுடன் வந்துள்ளார். சந்தானத்தை சைக்கிளை மிதிக்க சொல்லி, தான் பின்னால் உட்கார்ந்தபடி மகாபலிபுரத்துக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சாலையோர டீ கடையில் டீ வாங்கிக் கொடுத்து, மீண்டும் சென்னையை நோக்கி சைக்கிள் மிதிக்கச் சொல்லியுள்ளார். இப்படியே சில தினங்கள் நடந்த போது, 'இந்த டீயில் அப்படி என்ன மச்சான் விசேஷம் இருக்கு?' என்று சந்தானம் கேட்க, 'இந்த டீயில் எதுவும் இல்லை; இந்த டீ குடிப்பதற்காக, சென்னையில் இருந்து மகாபலிபுரத்துக்கு சைக்கிள் மிதித்து வந்தோமே... அதில் தான் விசேஷம் உள்ளது. இப்படி தினமும் சைக்கிள் மிதித்தால் உடம்பு தானாக ஸ்லிம்மாகி விடும்...' என்று கூறியுள்ளார் ஆர்யா.— சி.பொ.,'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...''சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில், பஞ்சாயத்து செய்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடிக்கடி உச்சரித்த, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' என்ற வார்த்தையை, ஒரு தனியார் சேனலில், செமத்தையாக கலாய்த்தனர். விளைவு, அந்த வார்த்தை, இப்போது பெரிய அளவில் பிரபலமாகி விட்டது.ஆனால், இப்படி தன்னை கலாய்த்ததால், அந்த சேனல் மீது சொல்ல முடியாத ஆத்திரத்தில் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தான் இயக்கி வரும், அம்மணி படத்தில், சில, 'பஞ்ச்' டயலாக்குகளை அந்த சேனலுக்கு எதிராக வைத்துள்ளார்.— எலீசாசூப்பர் ஸ்டார் இல்லை சிவகார்த்திகேயன்!ஏற்கனவே, விஜய் - அஜித் இருவரில், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி திரைக்குப் பின், நடந்து வருகிறது. இந்நிலையில், ரஜினி முருகன் படத்தில், ரஜினியின் ரசிகராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அப்படத்தின் போஸ்டர்களில் ரஜினி போன்று போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த அஜித் - விஜய் ரசிகர்கள், அடுத்த ரஜினி, தான் தான் என்பதைக் குறிப்பிடவே, இப்படி போஸ் கொடுத்துள்ளார் என, இணையதளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். விளைவு, 'அப்படியெல்லாம் எந்த ஆசையும் எனக்கு இல்லை; நான் எப்போதுமே ரஜினியின் ரசிகன் மட்டுமே...' என்று பதில் கொடுத்து, சர்ச்சையை, 'ஆப்' செய்து விட்டார் சிவகார்த்திகேயன்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!அகர்வால் நடிகை, தளபதி நடிகருடன் நடித்த இரு படங்களும் வெற்றி பெற்றபோதிலும், தளபதியின் கவனம், வேறு சில நடிகைகளின் பக்கம் திரும்பி விட்டது. இருப்பினும், நடிகரை விடாது துரத்தும் நடிகை, நள்ளிரவு நேரங்களில் கூட போன் செய்து டார்ச்சர் கொடுக்கிறார். அம்மணியின் இந்த அன்புத் தொல்லை காரணமாக, நடிகரின் ரகசிய மொபைல் போன், சமீப காலமாக, 'சுவிட்ச் ஆப்'பிலேயே இருக்கிறது.சுள்ளான் நடிகர் முன்பெல்லாம் இயக்குனர்களின் நடிகராக இருந்தார். ஆனால், தற்போது, இயக்குனர்கள் விஷயத்தில் அளவுக்கு அதிகமாக தலையிடுகிறார். அத்துடன், புதுமுக இயக்குனர்களுக்கு சரியானபடி சம்பளமும் கொடுப்பதில்லை. இதனால், 'ஒரு இயக்குனரின் மகனே இப்படி இயக்குனர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறாரே...' என்று, அவர் மீது புதுமுக இயக்குனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பாய்ஸ் நடிகரை விட்டு பிரிந்த பின், அஞ்சான் நடிகையின் ரூட் கிளியராகி விட்டது. அதனால், எவ்வித தங்குதடையுமின்றி, சுதந்திரமாக சினிமா ஜாம்பவான்களை சந்தித்து வரும் நடிகை, சில மேல்தட்டு நடிகைகளுக்கு செல்லவிருக்கும் படங்களைக் கூட, இடையில் புகுந்து, தட்டிப் பறித்து வருகிறார். இதனால், இந்த நடிகையினால் பாதிக்கப்பட்டு வரும் பப்ளிமாஸ் நடிகை, படப்பிடிப்பு தளங்களில், அஞ்சான் நடிகையை வெளிப்படையாகவே திட்டி தீர்க்கிறார். சினி துளிகள்* மாரி மற்றும் பாயும் புலி என்ற இரு படங்களில் ஒன்று வெற்றி பெற்றாலும், குறைத்த தன் படக்கூலியை உயர்த்தி விட திட்டமிட்டுள்ளார் காஜல் அகர்வால். * கெத்து படத்தில், பக்கா தமிழச்சியாக நடித்துள்ளதாக கூறுகிறார் லண்டன் நடிகை எமி ஜாக்சன்.* முன்னணி கதாநாயகர்களின் படங்களில் முதன்மை கதாநாயகி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால், இரண்டாம் கதாநாயகியாக நடிக்கவும், சம்மதம் சொல்லி வருகிறார் ஹன்சிகா. அவ்ளோதான்!